Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: நாடு முழுவதும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு …!!

அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பூசி போடும் நாள் என்ன என்பதை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதற்கான தேதி மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

முன்னதாக தடுப்பூசி போடும் பணிக்காக ஒத்திகை நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகையானது நடைபெற்ற நிலையில் வரும் 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேடிய ஒரு விஷயத்திற்கு பதில் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். கொரோனா தடுப்பூசி எப்போதும் பயன்பாட்டுக்கு வரும் என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. முன் களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக மூன்று கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.முன் களப் பணியாளர்களுக்கு பிறகு 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

 

Categories

Tech |