பள்ளிகளில் காலை உணவு திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய திட்டத்தை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் அதனை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.