தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, புதுக்கோட்டை நகராட்சி 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றி பெற்றுள்ளார்.