வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, பின் மண்டலமாக வலுபெறும். இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும், இது வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.