Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்… பரபரப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திடீரென உயிரிழந்தார்.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 72.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதுமட்டுமன்றி கட்சிகள் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மாதவராவ் திடீரென உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக மதுரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |