Categories
மாநில செய்திகள்

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை…. அதிரடி உத்தரவு…..!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்..

Categories

Tech |