நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் மீது சாலை மறியலில் ஈடுபட்டது. ரூபாய் 5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. திருச்சியில் அவர் இரண்டு வாரம் தங்கியிருந்து கையெழுத்திடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே 2 வழக்குகளில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், நில அபகரிப்பு வழக்கிலும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் அமைச்சர் ஜெயக்குமார் விரைவில் சிறையில் இருந்து வெளியாகிறார்..