மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அடுக்கு மாடி கட்டிடத்தின் இடுபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை எடுத்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்குப்பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஏராளமான மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது
Categories