Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: மேலும் 12 மாவட்டத்திற்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கனமழை காரணமாக தஞ்சை, கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |