Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை,திருவாரூர் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்  மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.இந்நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று முன் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |