Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : 144 தடை மீறல் – ரூ 40,00,000 அபராதம் வசூல் – முதல்வர்

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை மீறியவர்களிடம் ரூ 40 லட்சம் வரை அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று மத்திய மாநில அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் தடையை மீறி பலர் வெளியே வந்ததக்க பலர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் 144 உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் கூட்டுறவு மூலம் வாங்கப்படும். 4 லட்சம் ரேபிட் சோதனை கிட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுவோரிடம்  40 லட்ச ரூபாய் அபராதம் வாங்கப்படுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 14, 125 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 

Categories

Tech |