Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சீனாவுடன் மோதல்: 20 இந்தியா ராணுவத்தினர் மரணம் …!!

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நேற்று நடந்த மோதல் துப்பாக்கி சண்டை அல்ல என்றும்,  கைகலப்பு என்றும் தெரியவந்துள்ளது.

 

இதில் கற்களாலும், கட்டைகளாலும், இரும்புக் கம்பிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது இந்தியா ராணுவ வீரார்கள் 10 பேர் காணவில்லை என்றும், சீன வீரர்கள் கடத்திச் சென்று இருக்கலாம் என்றும் பரபரப்பாக சொல்லப்பட்டு வருகின்றது.

காணாமல் போன வீரர்களை தேடும் பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், பயப்படவேண்டாம் என்றும் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்தியா – சீன வீரர்கள் மோதலில் 10 இந்தியர்கள் வீர மரணம் அடைந்துள்ளார்கள் என்று செய்தி வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்தியா – சீனா மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது இரு நாட்டு உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |