தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருதி முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அரசு வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப 25 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைகழகம் முழுமையாக மாற்றி அமைக்கிறது. உக்ரேனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.