நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மசோதா ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ஆம் தேதி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.. அதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே ரத்து செய்யப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.. இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்துள்ளார்.. 3 வேளாண் சட்டங்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.