Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா …..!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும்  2 பேர் குணமடைந்துள்ளனர்.

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் , தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 43538 பேர் தனிமைப்படுத்த்தி கண்காணித்து வருகின்றோம். தாய்லாந்து நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து இவர்களுக்கு பரவியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது.

Categories

Tech |