இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்னிக்கை 1024ஆக உள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில்186 பேரும் , கேரளாவில் 182 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 90க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது வேதனைக்குரிய தகவலாகத்தான் பார்க்கப்படுகின்றது.