Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா பாதிப்பு – ஒருவர் குணமடைந்தார் – அமைச்சர் தகவல் ..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 23 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மதுரை சார்ந்தவர் மரணமடைந்தார். காஞ்சிபுரத்தை சார்ந்தவர் ஏற்கனவே நலமடைந்து வீடு திரும்பின்னர். 21 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் ஒரு தகவலை பதிவிட்டிருக்கிறார். அது மிகவும் நல்ல மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.

அதாவது இரண்டாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய ராம்பூர் என்ற ஊரில் இருந்த அவர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டு , வேலை தேடி சென்னை வந்தார். 20 வயதான இவருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை கண்டறியப்பட்டது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தன.அவர் ஆரம்பம் முதலே  நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டு வந்தது நிலையில் தற்போது அவருக்கு இரண்டு முறை கொரோனா சோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்றும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்ற ஒரு மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Categories

Tech |