ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11-இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகின்றார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசு அதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடியும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மத்திய அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் கடந்த சில வாரங்களாகவே கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்து கட்சி மக்களவை பிரதிநிதிகளுடன் காணொளியில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க பட்டதாக தெரிகிறது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பெரும்பாலான மாநிலங்கள் வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர் உடன் காணொலி காட்சி மூலம் பேச இருக்கின்றார். இதில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க படுவதற்கான ஆலோசனை நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.