இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு குறித்து காலை , மாலை என இரண்டு நேரங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது இருக்கக்கூடிய இந்த தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக அதிகரித்துள்ளது. 100 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது குஜராத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.