திமுகவின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்துள்ளது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன். அவர் தற்போது இருதய அறுவை சிகிச்சை ஒரு மாதத்துக்கு முன்பாக செய்து கொண்டார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக வினர் வருகை தந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி வர இருக்கின்றார்.
கடந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதத்தில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில்அனைவருடைய பாராட்டையும் பெற்றவர். பல்வேறு விஷயங்களைப் பேசினார். முதல்முறையாக தனது கன்னிப் பேச்சை அருமையாக பேசினார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்து பாராட்டு தெரிவித்தார். குடியாத்தம் மக்களுடைய பல்வேறு பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் காத்தவராயன். அவர் வந்து தற்போது மறைந்துவிட்டார் என்ற செய்தி திமுக தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.