Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : நாடு முழுவதும் அதிர்ச்சி…. நீட் தேர்வு முடிவில் குளறுபடி…. மாணவர்கள் ஷாக் …!!

நீட் தேர்வு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தேர்வு முடிவுகளை பார்த்ததில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் மற்றும் எண்ணிக்கையில் ஒரு பெரிய குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.

திரிபுரா மாநிலத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டால் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் அந்த மாநிலத்தில் 88 ஆயிரத்து 889 தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,307பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல தெலுங்கானாவில் 50,392பேர் தேர்வெழுதி, 1,738பேரே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15%என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 1.56 லட்சம் பேர் தேர்வெழுதியத்தில், 7,323பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 60.79என தேர்ச்சி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேசிய தேர்வு முகாமை  தன்னுடைய விளக்கத்தையும், மத்திய கல்வி துறை அமைச்சகம் சார்பில் ஒரு விளக்கம்  இன்று கொடுக்கப்படும் என்று தெரிகின்றது.

Categories

Tech |