Categories
தேசிய செய்திகள்

BIG Breaking: ஒரே நாளில் கொரோனா பாதித்த 2003 பேர் பலியானதால் அதிர்ச்சி… நாட்டில் 11,903 ஆக உயர்ந்த உயிரிழப்புகள்!!

நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை உயிரிழப்புகள் இதுபோன்று உயர்ந்ததில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,409 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 10,974 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 4ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,86,935 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,13,445 பேரும், தமிழகத்தில் 48,019 பேரும், டெல்லியில் 44,688 பேரும், குஜராத்தில் 24,577 பேரும், ராஜஸ்தானில் 13,216 பேரும், உத்தரபிரதேசத்தில்14,019 பேரும், மத்திய பிரதேசத்தில் 11,083 பேரும், மேற்குவங்கத்தில் 11,909 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,86,935 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,55,227 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |