Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: சிக்கிம்: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு:

வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு  சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது.

நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கிறது. அப்பொழுது  ஒரு வளைவு என்பது இருந்திருக்கிறது. ஊசி வளைவு போன்று இருக்கும் அப்படியான ஒரு வளைவு பகுதியில் வாகனத்தை  திருப்பும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த அனைவருமே படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். இதில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மூன்று கமாண்டோக்கள் என்று சொல்லக்கூடிய அதிகாரிகள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். காயமடைந்த சிலர் உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு  சிகிச்சை அளித்து வருவதாக சொல்லப்படுகிறது.

மிகவும் துயரமான இந்த ஒரு செய்தியை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதேபோல மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் அவர்களும் இந்த விபத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.  இன்று காலையில் நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாகவும்,  அவர்களின் அர்ப்பணிப்பிற்காக தேசம் ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைத்த பிராத்திகிறேன் என அவர் சொல்லியிருக்கிறார்.

ராணுவம் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதே போல சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் குடும்பத்தாருக்கும் தகவல் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு உயர் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

Categories

Tech |