வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். டிரம்ப்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது என அசோசியேட்டட் பிரஸ் என்ற நம்பகமான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக ஜோ பைடனுக்கு வெறும் 66 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில் முற்றிலுமாக அவர் இந்த தேர்தலில் வென்று அதிபராக கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை ட்ரம்ப் விடுத்திருந்தார்.ஏற்கனவே இதனை வலியுறுத்தி வந்த ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தும் விதமாக மீண்டும் ஒரு ட்விட் மூலமாக அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு மிரட்டல் விடுக்கும் தொனியில் பதிவிட்டுள்ளார். ஒரு நாட்டினுடைய… வல்லரசு நாட்டினுடைய அதிபராக இருக்கக்கூடியவர் மிரட்டல் விடுக்க கூடிய தொனியில் டுவிட் பதிவிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
STOP THE COUNT!
— Donald J. Trump (@realDonaldTrump) November 5, 2020