TNPSC தேர்வில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கடந்த 7ஆம் தேதி பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அறிமுகப்படுத்தியது. அதில் ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை அதனைத் தொடர்ந்து நேற்று டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது.
அதன்படி மேலும் பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC அமுலாக்கியுள்ளது. அதில் , குரூப் 4 , குரூப் 2 ஏ தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது தேர்வை பொருத்தவரை நேரடியாக ஓஎம்ஆரில் விடையளிக்கும் வகையே ஒரு தேர்வும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் குரூப் 4 , தேர்வு 2 ஏ_வில் முதல் நிலை தேர்வு என்று நடத்தபடும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இனிவரும் காலங்களில் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அந்த தேர்வு கூடத்திற்கு தேர்வர்கள் வந்திருக்க வேண்டும்
அதே போல விடைத்தாளில் விடைகளோடு சேர்த்து விடை தெரியவில்லை என்றாலும் அதனை குறிப்பிடுவதாக ஒரு வாய்ப்பும் வழங்கப்படும். அதனை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்
தேர்வர்களின் கையொப்பம் அல்லாமல் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
விடைத்தாள் பாதுகாப்புக்கான மையம் முழுமையாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஜிபிஎஸ் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கண்காணிக்கப்படும். 24 மணி நேரமும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து பார்க்கும் விதமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தேர்வர்கள் ஏதேனும் சீர்திருத்தம் சார்ந்து , தேர்வு முறைகள் சார்ந்து , தேர்வு முறைகேடு குறித்து சந்தேகம் இருந்தால் இதனை தீர்ப்பதற்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் புதிய தளம் ஒன்று தொடங்கப்படும். அதன்மூலம் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு ஆலோசனை வழங்கலாம். இதன் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பை TNPSC அறிவித்துள்ளது.