Categories
உலக செய்திகள்

BIG BREAKING: அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடன் முன்னிலை…. டிரம்ப்பை அடித்து தூக்கினர் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 91 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 67 வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு கட்சியினரும், ஜனநாயகக் கட்சி யினரும் வென்ற மாநிலங்கள் பெரும்பாலும் அவர்களுக்கே மீண்டும் வாக்குகள் சென்றிருக்கின்றன.

ஆனால் பேட்டில் கிரவுண்ட் ஸ்டேட் என்று சொல்லக்கூடிய புளோரிடா மாகாணம் 29 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கிறது. அந்த புளோரிடாவில் தற்பொழுது டொனால்டு முன்னிலையில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் என்னவென்றால் பல ஆண்டுகளாக குடியரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களித்து கொண்டிருக்கக்கூடிய டெக்சாஸ் மாநிலத்தில் ஜனநாயக கட்சியை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல் வந்திருக்கிறது.  டெக்சஸ் மாநிலம் 38 வாக்குகளை கொண்டிருக்கிறது. அந்த மாநிலமானது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றால் இது மிகப்பெரிய வரலாறாக அமையக் கூடும்.

ஆனால் ஜோ-பைடன் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தற்போது முன்னிலையில் இருப்பதாக தகவல் இருக்கிறது. இதுவரையிலான முடிவுகளின் அடிப்படையில் 91 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்று இருக்கின்றார். 67 வாக்குகளை டிரம்ப் பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக 270 வாக்குகளை பெற்று ஆகவேண்டும். 270 வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவரே அமெரிக்க அதிபராக ஆக முடியும், என்பது அந்த நாட்டின் தேர்தல் நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |