தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் போன்ற கேள்விகளுக்கு விவாதங்களும் நடைபெற்றது. அதோடு 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஐந்து மணி நேரத்தகத்துக்கும்மேல் மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி கூறுகையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.