Categories
அரசியல்

” பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு ” அமமுக_வை கட்சியாக நினைக்கல…. முதல்வர் பேட்டி…!!

பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு , அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி சேலத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

 

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து  வட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சேலத்தில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து தன்னுடைய முதல் பிரசாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி  வேட்பாளரை  அறிமுகம் செய்து தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது . நாங்கள் சொல்ல மாட்டோம் செய்வோம் . எங்களுடைய தேர்தல் பணி வேகமாக சிறப்பாக நடாத்திபெற்றுக் கொண்டிருக்கிறது. 22_ஆம் தேதி தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

Image result for சேலத்தில் முதல்வர் பிரசாரம்

மேலும் அவர் பேசுகையில் அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை . கட்சியாக பதிவு செய்யாத அமமுக_விற்கு எந்த சின்னமே கிடைக்கவில்லை  . குழந்தை பிறப்பதற்கு முன்பு பெயர் வைத்ததை போன்று அமமுக என்று விமர்சனம் செய்தார் . பின்னர் அமமுக_வின் சேலம் வேட்பாளர் S.K செல்வம் 95 சதவீத அதிமுக தொண்டர்கள் மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு  பெரிய தேசிய அவர் சொல்லிட்டாரு நீங்க கேள்வி கேட்குறீங்க என்று முதல்வர் கூறினார்.

Categories

Tech |