Categories
மாநில செய்திகள்

BIG NEWS : அலர்ட்…. அலர்ட்… 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்!!

தெற்கு அந்தமான் மற்றும் ஒட்டிய பகுதியில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் என்ற தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

ஏற்கனவே தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.. வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகின்றது.. இதனை தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 11ஆம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நோக்கி வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த சூழலில் தான் வரும் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து இதேபோல மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டுள்ளது.. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா  என்று இதுவரைக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை..

ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இருக்கிறது.. அது முழுமையாக கடந்து சென்ற பிறகு தான் இந்த புதிய காற்றழுத்த தாழ்வு எப்படி நகரும், எந்த பகுதியை நோக்கி வரும், மழையின் அளவு எப்படி இருக்கும், என்ற விவரம் தெரிய வரும்.. தற்போதைய நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்ற விஷயத்தை மட்டும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம், திருப்பூண்டியில் அதிக அளவாக தலா 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |