தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்கு பயிர் காப்பீடு செய்வது நல்லது. நெற்பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ஆவணங்களுடன் இன்றும், நாளையும் பதிவு செய்ய வேண்டும்.
பொது சேவை மையங்கள்,கூட்டுறவு மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது நல்லது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த இழப்பை தவிர்க்க விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வைத்துக் கொள்ளலாம்.