கொரோனா தடுப்பூசிகாக உங்கள் போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று .தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசும் பொதுமக்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். தற்போது புதிதாக கொரோனா இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். சில தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து ஆதார் எண்ணை அளிக்க கோரி பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஒடிபி வரும் என்று கூறி நமது விவரங்கள், வங்கித் தொகை ஆகியவற்றை திருடுவதாக கூறியுள்ளது.