Categories
சற்றுமுன்

BIG NEWS: உயிரை விட பெருசு இல்ல… யாரும் தற்கொலை செய்யாதீங்க…. அண்ணனாக சூர்யா வேண்டுகோள் …!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உங்க வாழ்க்கையில் போன வாரம் அல்லது போன மாதம் ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை வேதனை இருந்து இருக்கும். அது இப்போது இல்லாமல்  இருக்கும், யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும்,  இல்லாம கூட போயிருக்கும். ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விட பெருசு இல்ல.  உங்க மனசு கஷ்டமா இருக்கா… நீங்க நம்புறவங்க, உங்களுக்கு பிடித்த… உங்க அப்பா, அம்மா, இல்ல பெரியவங்க, நண்பர்கள், ஆசிரியர்கள் என யாரிடமாவது மனசு விட்டு பேசுங்க.

இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இதெல்லாம் கொஞ்ச நேரத்தில் கொஞ்சமாக குறைந்திடும். தற்கொலை செய்து  வாழ்க்கையை முடித்து விடலாம் என்று முடிவு பண்றது எல்லாம் ரொம்ப தவறு.இது நீங்க  விரும்புற…. உங்க  அப்பா, அம்மா, குடும்பத்துக்கு
கொடுக்கிற வாழ்நாள் தண்டனை, மறந்துவிடாதீர்கள்.

நான் கேவலமா மார்க் வாங்கியிருக்கேன். ஆனா உங்கிட்ட ஒருத்தன்தான் நிச்சயமாக சொல்லமுடியும். மதிப்பெண், தேர்வு, இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிக்கிறது அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை  புரிஞ்சுக்வும்,  நேசிக்கவும் நிறைய பேர் இருக்காங்க. நம்பிக்கை தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயிக்கலாம் என நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |