தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.. காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது. இன்றைய காலை அறிவிப்பில் கூட அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அதிகாரப்பூர்வமாக உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது..
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு வரும் என்றும், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் அருகே 11ஆம் தேதி அதிகாலை வரும்.. இது புயலாக மாற வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
காற்று எப்போதும் குறைவாக இருந்தால் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.. காற்றழுத்த தாழ்வு பகுதி அதிகப்படியான மழையை கொண்டுவரும்.. தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. நாளையும், நாளை மறுநாளும் (10 மற்றும் 11ஆம் தேதி) ஒரு சில இடங்களில் அதீத கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.