கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் புதிதாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்னும் வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை உலகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இந்த ஒமைக்ரான் தொற்று பரவல் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் மரணங்கள் ஏற்படவில்லை என்றாலும் உலகம் முழுக்க பல நாடுகளிலும் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால் உலக நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு நாட்டிலும் உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதல் முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.