கொரோனாவை விட கொடிய வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் பறவை காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவத்தொடங்கியது.
இந்த பாதிப்புகளிலிருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில், தற்போது கொரோனாவை விட கொடிய வைரஸ் என்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நோய்க்கு Disease X எனவும் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது காங்கோவில் கண்டறியப்பட்டுள்ள இந்த நோய் விரைவில் பெரிய அளவில் பரவக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.