நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவியின் புகைப்படம் இருந்தால் தான் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக மக்கள் குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயரைக் மாற்றுவதற்காக அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இதை பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். அதன்படி மக்கள் இடைத்தரகர்கள் மூலம் ரூபாய் 500 கொடுத்து புகைப்படம் மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் தேவையின்றி இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும், அரசு வழிகாட்டுதல் கிடைத்தவுடன் நாங்கள் குடும்ப அட்டைதாரர்களை அழைத்து மாற்றி விடுவோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.