தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 50% பெயரை பரிசோதனை மையத்தில் சிகிச்சை கொடுப்பதே அரசின் இலக்கு. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது சொந்த வாகனங்களிலோஅல்லது மாநகராட்சி வாகனங்களின் உதவிகள் பரிசோதனை மையங்களும் வரலாம் என கூறி உள்ளார்.