நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. . இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா பல மடங்கு அதிகரிக்கும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
தொற்று பாதிக்கப்பட்ட 50% பேர் பரிசோதனை மையத்தில் சிகிச்சை கொடுப்பது அரசின் இலக்கு. பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது சொந்த வாகனங்களிலோ அல்லது மாநகராட்சி வாகனங்களிலோ பரிசோதனை மையங்களுக்கு வரலாம் என்று கூறினார்.