Categories
மாநில செய்திகள்

BIG NEWS: சென்னையில் முழு ஊரடங்கு…? சற்றுமுன் அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது உருமாறிய புது வைரஸ் ஒமைக்ரான் தலைகாட்டி உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில் சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா அதிகரிப்பின் காரணமாக கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். அதில் டிசம்பர் முதல் வாரத்தில் 1,088 ஆக இருந்த கொரோனா நான்காவது வாரத்தில் 1720 ஆக அதிகரித்துள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா சோதனை, தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |