ரிசர்வ் வங்கி இதுவரை பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்துள்ளது. அதேபோன்று சமீபத்தில் மற்றொரு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. அதாவது ஏற்கனவே ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ய முடிவு செய்த நிலையில் செப்டம்பர் 22 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் படி ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் திரும்ப பெற உள்ளது. ஏனெனில் வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லாத காரணத்தினால் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இந்த உரிமம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும் அல்லது எடுக்கவும் முடியாது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இது 1949 இன் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவுகள் படி, 11(1) மற்றும் 22(3)(d) பிரிவுகள் 22(3)(a), 22(3)(b), 22(3)(c), 22(3)(d), மற்றும் 22(3)(e) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டின் DICGC சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.5,00,000 வரையிலான வைப்புத் தொகை காப்பீட்டுக் கோரிக்கைக்கு உரிமை உண்டு.