தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்து வைக்க உள்ளார் அதனால் வெளி சந்தையில் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை குறையும்.அரசின் வலிமை சிமெண்ட் தனியார் சிமெண்ட் விலையை விட 90 ரூபாய் குறைவாகவும்,தரமானதாகவும் இருக்கும் என ஏற்கனவே அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.