தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவும், திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி, மற்றும் தொகுதி பண்கேஈடு குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எடப்பாடி கறார் காட்டுவதாக பாஜக அதிருப்தியில் இருந்தது. இதையடுத்து நேற்று பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கி அதிமுக அறிவித்தது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தமானது நேற்று இரவு கையெழுத்தானது கடந்த ஒரு வாரமாக இழுபறியில் நீட்டித்த இந்த தொகுதி பங்கீடு நேற்று உறுதியாகியுள்ளது.