Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு….. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்….???

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசின் மானியம் தரமாட்டோம். ஒன்றிய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் உயர்ந்துள்ளது.வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |