தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.