தமிழகம் முழுவதும் நாவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 5000 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக 5000 மருத்துவ முகாம்கள் நாளை நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 750 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும், ஞாயிறுக்கிழமை 8-வது மிக தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் 50 மாணவர்களை சேர்க்க அனுமதி கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.