Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: திமுகவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை… பெரும் பரபரப்பு…!!!

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற உள்ளதாக தெரிகின்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தையில் காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளே ஒதுக்க இருப்பதால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் 35 சீட்டுக்கு கீழே ஒதுக்கினால் கூட்டணியிலிருந்து வெளியேற உள்ளதாக கருத்து நிலவுகிறது. அதே நேரத்தில் கமலின் மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இது திமுகவுக்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |