Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BIG NEWS: தோனி போல முடிவெடுத்து….. கேப்டன் பொறுப்பில் கோலி விலகல்…. புதிய கேப்டனாக ரோஹித் ?

கடந்த சில தினங்களாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பரவலாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரத்தை தற்போது இந்திய கேப்டன்  உறுதி செய்திருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து அவர் தற்போது விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அடுத்த மாதம் துபாயில் நடைபெறக்கூடிய t20 உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்பு கோலி கேப்டன் பதவியில் இருந்து  விலகுகின்றார். 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் தொடருவார்  என்றும் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர்  ரவிசாஸ்திரி அவர்களிடம்  ஆலோசனை செய்ததாகவும், பிசிசிஐ நிர்வாகிகளாக இருக்கக்கூடிய தலைவர் சவுரவ் கங்குலி, பொருளாளர் ஜெய்ஷாவிடமும் ஆலோசித்ததாகவும், தனக்கு நெருங்கியவர்களிடமும் நீண்ட ஆலோசனை செய்த பிறகு தான் இந்த முடிவு எடுத்து இருப்பதாக கோலி அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றார்.

கேப்டன் பொறுப்பை தொடர்ந்து 5 ஆண்டுகளாக மேற்கொண்ட தனக்கு  ஒரு இடைவெளி தேவை எனவும்,  அதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து இந்தியாவிற்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் தனது பங்களிப்பை நான் வழங்குவேன் என்பதை அவர் உறுதியாக கூறியிருக்கிறார்.

அடுத்து 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா அவர்கள் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பரவலாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணியை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய பணி  என்பது கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெறுகின்றது. சவுரவ் கங்குலி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதனால் இளம் வீரர்கள் நிறைய பேர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள். அடுத்தடுத்து கேப்டன் பதவிகளையும் வேறுவேறு வீரர்களுக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் தான் அணி சிரத்தண்மையுடன் இருக்கும். அதனை மகேந்திர சிங் தோனி சரியான நேரத்தில் செய்து கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்தார். தற்போது விராத் கோலியும் அதே முடிவை தற்போது எடுத்துள்ளார் என்று சொல்ல வேண்டும். இனி வரக்கூடிய நாட்களில் இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று பிரிவுகளிலும் நிறைய மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Categories

Tech |