நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . இதன் காரணமாக விலைவாசி உயர்வு அதிகரிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் விலைவாசி உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விண்ணைத் தொடும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார், ஏசி, டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 4000 வரை உயரவுள்ளது. உற்பத்திக்கான செலவு உயர்ந்து இருப்பதால் விலை உயர இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விமான கட்டணம், மின் கட்டணம், பால் போன்ற அத்யாவசிய பொருட்கள் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது.