நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்கள், பார்கள், மது கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. மால்கள், வணிக நிறுவனங்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி. வெளிநாடுகளில் இருந்து வரும் வாகனங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி.
மேலும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.