மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
வருகின்ற 29 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மீண்டும் இரண்டாவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்படும் எனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது.